என்னது சிஏஏ எதிர்ப்புப் போராட்டமே நாடகமா..? ஆம் ஆத்மி காட்டம்..! பாஜக பதில் தாக்குதல்..!

18 August 2020, 11:30 am
shaheen_bagh_protestors_join_bjp_updatenews360
Quick Share

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் போராட்டங்களை நாடகம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியதற்காக, டெல்லி பாஜக ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி,  இதனால் முஸ்லிம்களிடையே ஆதரவை இழக்கும் என்ற அச்சத்தால் இவ்வாறு கூறியுள்ளது என்று பாஜக மேலும் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் மையமான ஷாஹீன் பாக் நகரைச் சேர்ந்த பல முஸ்லிம்கள், ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்த ஒரு நாள் கழித்து ஆம் ஆத்மி கட்சிக்கும் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான இந்த வாரத்தைப் போர் வெடித்துள்ளது.

நேற்று ஆம் ஆத்மி கட்சி, முழு ஷாஹீன் பாக் போராட்டத்தையும் பாஜக திரைக்கதை எழுதி நடத்தியது என்று குற்றம் சாட்டியது. அதன் தலைமை இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்காக கிளர்ச்சியாளர்களின் ஒவ்வொரு அசைவையும் ஆணையிட்டு வழிநடத்தியது எனத் தெரிவித்தார்.

டெல்லி தேர்தலுக்கான பாஜகவின் பிரச்சாரம் ஷாஹீன் பாக் போராட்டங்களை மையமாகக் கொண்டது என்றும், போராட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சையால் பயனடைந்த ஒரே கட்சி இது என்றும் ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தனது வாக்கு வங்கி அரசியல், பாஜகவில் சேர ஒரு சிஏஏ எதிர்ப்புப் பகுதியைச் சேர்ந்த முஸ்லீம்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால், இவ்வாறு பேசுவதாக டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

“ஷாஹீன் பாக் போராட்டம் நடைபெற்றபோது ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மும்முரமாக இருந்தார். டெல்லி கலவரத்தில் அவரது கட்சி கவுன்சிலர் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர். இப்போது அவரது கட்சித் தலைவர்கள் சிஏஏ எதிர்ப்பு எங்களால் திட்டமிடப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.” என்று ஆதேஷ் குப்தா கூறினார்.

“முஸ்லீம்கள் பாஜகவில் சேர்கிறார்கள் என்று அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே அவர்களின் வாக்கு வங்கி அரசியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது” என்று அவர் கூறினார்.

ஷாஹீன் பாக் நகரைச் சேர்ந்த பல முஸ்லிம்கள் சுஜ்தேயில் உள்ள கட்சியின் டெல்லி யூனியன் பிரதேச அலுவலகத்தில் பாஜகவில் இணைந்தனர்.

டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார் சவுத்ரியும் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை விமர்சித்து, அதன் தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்று போன்ற நெருக்கடிகளிலிருந்தும், ஊரடங்கினால் அவர்களின் நிதிப் பிரச்சினைகளிலிருந்தும் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள் என்று கூறினார்.

“ஷாஹீன் பாக் மீது பாஜகவுடன் பழிபோடுவதற்குப் பதிலாக, தொற்றுநோய்களின் போது மக்களுக்கு எவ்வாறு உதவ முயன்றார்கள் என்று கெஜ்ரிவாலும் அவரது கட்சித் தலைவர்களும் டெல்லி மக்களுக்கு சொல்ல வேண்டும்” என்று சவுத்ரி கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளைப் பெற்ற போதிலும், ஷாஹீன் பாக் முதல் பல முஸ்லீம்களை தனது கட்சிக்கு இணைப்பதில் முக்கிய பங்கு வகித்த பாஜக தலைவர் நிகாத் அப்பாஸ், “ஷாஹீன் பாக் நகரிலிருந்து பல முஸ்லீம்கள் பாஜகவில் இணைந்ததால் ஆம் ஆத்மி தலைவர்கள் பயந்தனர்.” எனத் தெரிவித்தார்.

டெல்லி பாஜக தலைவர், நாட்டின் முஸ்லீம்கள் சிஏஏ பிரச்சினை அவர்களைப் பாதிக்கவில்லை என்றாலும் அவர்களைப் பயமுறுத்துவதற்காக எழுப்பப்பட்டது என்பதை உணர்ந்திருப்பதாகக் கூறினார்.

“ஷாஹீன் பாக் நகரில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது அவர்கள் சொன்னதை கெஜ்ரிவாலும் அவரது கட்சியும் மக்களுக்கு சொல்ல வேண்டும்” என்று குப்தா கூறினார்.

“சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் அவர்கள் ஏன் இப்போது பொய் சொல்கிறார்கள்?” என்று குப்தா மேலும் கூறினார்.

Views: - 30

0

0