மதுபான பார்கள் இரவு 10 மணிவரை செயல்பட அனுமதி:அரசு அறிவிப்பு..!

20 June 2021, 11:03 pm
Quick Share

டெல்லி: டெல்லியில் 50% பேர் அமர்ந்திடும் வகையில் மதுபான பார்களை நாளை முதல் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. பூங்காக்கள், கோல்க் கிளப், வெளிப்புற யோகா மையங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. டெல்லியில் கடந்த சில தினங்களாக புதிய தொற்று மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. நேற்று 165 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அதைவிட குறைந்து, 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு விகிதம் 0.18 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 2,372 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதனிடையே டெல்லியில் கொரோனா கிட்டதட்ட முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதால் பெரியளவில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவருகின்றனர். இந்தநிலையில் டெல்லியில் மதுபான பார்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 10 மணிவரை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதனிடையே, சர்வதேச யோகா தினம் நாளை கடைபிடிக்கப்பட உள்ளது. இதனையொட்டி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘தியானம் மற்றும் யோகா அறிவியல்’ ஒரு ஆண்டு டிப்ளோமா படிப்பைத் தொடங்கிவைக்கிறார். இதில் பயிற்றுநராக சுமார் 450 பேர் தங்களை சேர்த்துள்ளனர். இவர்கள், அக்டோபர் 1 முதல் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

Views: - 118

0

0