காவலரை காரில் இடித்து இழுத்துச் சென்ற ஓட்டுநர்!! (வீடியோ)

Author: Udayachandran
15 October 2020, 6:05 pm
Police Car - Updatenews360
Quick Share

டெல்லி : விதிமீறலில் ஈடுபட்ட காரின் ஓட்டுநரை போக்குவரத்து காவலர் தடுக்க முயற்சித்த போது அவரை காரில் இழுத்துச் சென்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள தில்லா குவானில் விதி மீறலில் ஈடுபட்ட கார் ஓட்டுநரை அங்கிருந்த போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்தினார். அவர் ஏதோ கேட்பதற்கு முன் வாகனத்தை எடுத்த ஓட்டுநர் தொடர்ந்து இயக்கியதால் பேனட்டை காவலர் இறுகிப்பிடித்து கொண்டார்.

அதுமட்டுமல்லாமல், கார் தாறுமாறாக சாலையில் சென்ற நிலையில், சில மீட்டர்களில் அந்த காவலர் கீழே விழுகிறார். அருகில் வந்த வாகனங்கள் உடனே நிறுத்தப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக காவலர் உயிர் தப்பினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பேரால் பகிரப்பட்டது. அதுமட்டுமல்லாமல் காரில் காவலரை இழத்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 49

0

0