காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி என்கவுன்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…ஆயுதங்கள் பறிமுதல்..!!

Author: Aarthi Sivakumar
26 September 2021, 2:10 pm
Quick Share

பந்திபோரா: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய திடீர் என்கவுண்டர் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு -காஷ்மீர் மாநிலம் பந்திபோராவின் வாட்னிரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

முன்னதாக இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. தேடுதல் வேட்டையின்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியனர்.

இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது பாதுகாப்புபடையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் தற்போது போலீசாரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Views: - 212

0

0