மத்திய அரசின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்குமா..? விவசாய சங்கங்கள் இன்று ஆலோசனை..!

1 December 2020, 10:52 am
Farmers_Protest_UpdateNews360
Quick Share

அரசாங்கத்தின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் தங்கள் போராட்டத்தை விவசாய அமைப்புகள் தொடர்ந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மத்திய அரசின் அழைப்பு குறித்து முடிவெடுப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இன்று ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

உழவர் சங்கங்களின் தலைவர்களை மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஐந்து நாட்களாக டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ளனர். புதிய விவசாய சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை அகற்றி விவசாயத் துறையை நிறுவனமயமாக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

“குளிர் மற்றும் கொரோனா ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 3’ஆம் தேதி திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு முன்னர் உழவர் சங்கங்களின் தலைவர்களை கலந்துரையாட அழைத்தோம்” என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று தெரிவித்தார்.

விவசாயிகளின் தலைவர்களை அடைவதற்கான வழிகள் குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களிடையே கலந்தாலோசித்த பின்னர் தோமரின் அழைப்பு வந்தது. “இப்போது, ​​தேசிய தலைநகரில் உள்ள விஜியன் பவனில் டிசம்பர் 1’ம் தேதி மாலை 3 மணிக்கு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்று தோமர் கூறினார். நவம்பர் 13 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் இந்த முறை அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால், கிரந்திகரி கிசான் யூனியன், ஜம்முஹாரி கிசான் சபா, பாரதிய கிசான் சபா, குல் ஹிந்த் கிசான் சபா, கிருதி கிசான் யூனியன் மற்றும் பஞ்சாப் கிசான் யூனியன் உள்ளிட்ட 32 உழவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக நவம்பர் 13 கூட்டத்தில் முடிவேதும் எட்டப்படவில்லை மற்றும் புதிய வேளாண் சட்டங்கள் குறித்த அவர்களின் கவலைகளைத் தீர்க்க மத்திய விவசாய அமைச்சகம் டிசம்பர் 3’ம் தேதி இரண்டாவது சுற்று விவாதத்திற்கு அவர்களை அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 17

0

0