விவசாயிகளுக்கான 9வது தவணை நிதியுதவி : ரூ. 19,500 கோடியை விடுத்தார் பிரதமர் மோடி..!!
Author: Babu Lakshmanan9 August 2021, 2:25 pm
டெல்லி : கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 9-வது தவணை நிதியுதவி தொகையை பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.
காலநிலை மாற்றம் மற்றும் கொரோனா உள்ளிட்ட பேரிடர்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதுவும் இந்த நிதி, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்திங்ன மூலம் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.1.38 லட்சம் கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், 9 வது தவணை நிதியை, பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக விடுவித்தார். மொத்தம் 9.75 கோடி விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,500 கோடி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
0
0