விவசாயிகள் போராட்டத்தில் அரசியலா..? மத்திய உள்துறை அமைச்சர் நச் பதில்..!

29 November 2020, 7:51 pm
Amit_Shah_UpdateNews360
Quick Share

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தாங்கள் விவசாயிகளின் நலனுக்காக இருப்பதாகக் கூறி, அவர்களின் போராட்டம் அரசியல் சார்பற்றது எனத் தெரிவித்தார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காகவே உள்ளன. நீண்ட காலத்திற்குப் பிறகு விவசாயிகள் கட்டுப்பாடுகளை விட்டு வெளியே வரப் போகிறார்.” எனத் தெரிவித்தார்.

“அரசியல் ரீதியாக அதை எதிர்க்க விரும்பும் எவரும் அதைச் செய்யட்டும். ஆனால் விவசாயிகளின் எதிர்ப்பு அரசியல் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. ஒருபோதும் அவ்வாறு சொல்லமாட்டேன்.” எனத் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தேசிய தலைநகரில் உள்ள புராரி மைதானத்திற்கு மாறுவதற்கு ஷா ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர்கள் நியமிக்கப்பட்ட இடத்திற்கு சென்றவுடன் அவர்களுடன் கலந்துரையாட மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.

அப்போது மேலும் பேசிய அமித் ஷா, பாகிஸ்தானியர்கள், ரோஹிங்கியாக்கள் மற்றும் பங்களாதேஷியர்கள் சட்டவிரோதமாக ஹைதராபாத்தில் தங்கியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை என்.டி.ஏ அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து எய்ஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்தார்.

Views: - 18

0

0