ரூ.20,000 கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!

By: Udayachandran
5 October 2020, 10:03 pm
Nirmala Setharaman - Updatenews360
Quick Share

டெல்லி : நடப்பாண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று நள்ளிரவுக்குள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 42-ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடப்பாண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது: “நடப்பாண்டுக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் வரி ரூ. 20,000 கோடி இன்று இரவு மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 24,000 கோடி அடுத்த வார இறுதிக்குள் அந்தந்த மாநிலங்களுக்கு வழங்கப்படும்” என்றுட் தெரிவித்துள்ளார்.

Views: - 49

0

0