‘இனி ஒரே ஒரு call போதும்…ரயிலில் இருக்கை தேடி வரும் உணவு’: IRCTC புதிய ஏற்பாடு..!!

Author: Aarthi Sivakumar
25 September 2021, 2:03 pm
Quick Share

புதுடெல்லி: ரயில் பயணிகள் 1323 என்ற பிரத்யேக அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டால் இருக்கையை தேடி உணவு வரும் வசதியை ஐஆர்டிசிடி உருவாக்கியுள்ளது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் www.irctc.co.in என்ற இணையதளத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து ரயில்களில் பயணிக்கின்றனர்.

பயணிகள் வசதிக்காக பெட்ஷீட், மெத்தை, உணவு உள்ளிட்ட வசதிகளை ஐ.ஆர்.சி.டி.சி. படிப்படியாக துவங்கியுள்ளது. இவ்வசதிகளை மொபைல் போன் செயலி, இலவச டோல் எண் வாயிலாக பயணிகள் பெற்று வருகின்றனர்.

IRCTC, Order Food, Travelling, Indian Railways, Trains

தற்போது, ரயில் பயணத்தின்போது இருக்கை தேடி உணவு பெறுவதற்காக 1323 என்ற இலவச அழைப்பு எண்ணை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த, ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் கூறுகையில்,

பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், மொபைல் போன் செயலி, 139 அழைப்பு எண் வாயிலாக முன்பதிவு செய்து இதுவரை உணவு பெற்று வந்தனர். தற்போது, 1323 என்ற இலவச அழைப்பு எண் இருக்கை தேடி உணவு பெறுவதற்கு பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, சேலம் ரயில் நிலையங்களில் பயணிகள் இவ்வசதி வாயிலாக உணவு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 211

0

0