நாடு முழுவதும் 4 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு..! டிஜிட்டல்மயத்தால் சாதித்த மத்திய அரசு..!

7 November 2020, 4:49 pm
Ration_Cards_Tamilnadu_UpdateNews360
Quick Share

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஃப்.எஸ்.ஏ) கீழ் மானிய விலையில் கிடைக்கும் உணவு தானியங்கள் உண்மையான பயனாளிகளிடையே விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பொது விநியோக முறையிலிருந்து 4.39 கோடி போலி மற்றும் தகுதியற்ற ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

“2013’க்கு முன்னர் ஏராளமான போலி மற்றும் தகுதியற்ற ரேஷன் கார்டுகள் இருந்தன. கடந்த ஏழு ஆண்டுகளில், தகவல்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதன் மூலம் முறைகேடுகளைத் தடுப்பதில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். நகல் அட்டைகளை அடையாளம் காணவும், இறந்தவர்களின் பெயர்களை அகற்றவும், ஆதார் அட்டையை ரேஷன் கார்டுகளுடன் இணைப்பு பயன்பட்டது” என்று உணவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

ரேஷன் கார்டுகளின் டிஜிட்டல்மயமாக்கல் இயக்கம் பொது விநியோக முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த உதவியுள்ளது என்று அவர் கூறினார்.

தகுதியற்ற ரேஷன் கார்டுகளை களையெடுக்கும் அதே சமயத்தில் புதிய பயனாளிகளை இணைக்கும் பணியும் ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அதிகாரி கூறினார்.

81.35 கோடி மக்களுக்கு என்.எஃப்.எஸ்.ஏ பாதுகாப்பு வழங்குகிறது. இது நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும். தற்போது, ​​80 கோடிக்கும் மேற்பட்டோர் மாதாந்திர அடிப்படையில் மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுகின்றனர்.

Views: - 23

0

0