மெகா வெற்றி..! குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியது பாஜக..!

23 February 2021, 4:38 pm
BJP_flag_UpdateNews360
Quick Share

குஜராத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், மொத்தமுள்ள ஆறு மாநகராட்சித் தேர்தலுக்கான எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், அனைத்து மாநகராட்சிகளையும் பாஜக கைப்பற்றும் நிலையில் உள்ளது.

மொத்தம் 576 இடங்களில் இதுவரை 40 இடங்களை வென்ற பின்னர் பாஜ பெரும்பாண்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்று மாநில தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் இதுவரை ஒன்பது இடங்களை வென்றுள்ளது. அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா, பாவ்நகர் மற்றும் ஜாம்நகர் ஆகிய ஆறு மாநகராட்சிகளில் 144 வார்டுகளில் 576 இடங்களுக்கான வாக்குப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநகராட்சிகள் அனைத்தையும் பாஜக கடந்த பல தடவைகள் ஆட்சி செய்தது. இன்று காலை 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

அஹமதாபாத்தில் ஐந்து, ராஜ்கோட்டில் எட்டு, சூரத்தில் நான்கு, வதோதராவில் ஒன்பது, ஜாம்நகர் மற்றும் பாவ்நகரில் தலா ஏழு இடங்கள் உட்பட 40 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்று மூன்று மணி நேர வாக்கு எண்ணிக்கையின் பின்னர் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் இதுவரை வதோதராவில் ஏழு இடங்களையும், பாவ்நகர் மற்றும் ஜாம்நகரில் தலா ஒரு இடங்களையும் வென்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆறு மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சராசரியாக 46.1 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தொனியை அமைக்கும் என்பதால், மாநகராட்சித் தேர்தல் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு ஒரு சோதனையாகக் கருதப்பட்ட நிலையில், அனைத்து மாநகராட்சிகளையும் பாஜக கைப்பற்றுவது, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜகவிற்கு மிகப்பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

Views: - 11

0

0