பெண்கள் சுயசார்பு அடைய வட்டியில்லாக் கடன்..! குஜராத் அரசு அதிரடி முடிவு..!
13 September 2020, 9:00 pmபிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17’ஆம் தேதி கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள பெண்கள் மத்தியில் சுயதொழிலை ஊக்குவிப்பதற்காக வட்டி இல்லாத கடன்களை வழங்கும் சிறப்பு திட்டத்தை தொடங்கப்போவதாக குஜராத் அரசு இன்று தெரிவித்துள்ளது.
முக்யமந்திரி மகிலா கல்யாண் திட்டத்தின் (எம்.எம்.கே.எஸ்) கீழ், தலா 10 உறுப்பினர்களைக் கொண்ட பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு (சுய உதவிக்குழுக்கள்) ரூ 1 லட்சம் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன்களுக்கான வட்டி சுமையை மாநில அரசு ஏற்கும் என்று அது கூறியுள்ளது. இதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் தலா 50,000 என மொத்தம் ஒரு லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“குஜராத் அரசாங்கம் பெண்களுக்கு சுயதொழில் புரிய வைப்பதற்காக கடனுக்கான வட்டி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் பெண்கள் சுயசார்பு அடைய உதவும். மேலும் கொரோனாவால் முடங்கியுள்ள அவர்களது குடும்பங்களின் நிதி தேவையை சமாளிக்க உதவும்.” என குஜராத் அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் கிராமப்புறங்களில், குஜராத் வாழ்வாதார மேம்பாட்டு நிறுவனத்தால் எம்.எம்.கே.எஸ் செயல்படுத்தப்படும். குஜராத் நகர வாழ்வாதார மிஷன் நகர்ப்புறங்களில் இதை செயல்படுத்த உள்ளது.
“இந்தத் திட்டம் பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து சிறு வணிகத்தைத் தொடங்க உதவும்” என்று அரசாங்கம் மேலும் கூறியுள்ளது. இதற்காக விரைவில் வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குநர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அரசு கையெழுத்திடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0
0