இமாச்சல் பிரதேசத்தை புரட்டிப்போட்ட கனமழை: கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் பலி..!!

Author: Aarthi Sivakumar
24 September 2021, 5:12 pm
Quick Share

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த கனமழையால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக இமாச்சலப் பிரதேச பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இமாச்சல பிரதேச பேரிடர் மேலாண்மை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 130 நாட்களில் 432 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கனமழை பாதிப்பு காரணமாக 130 சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், பல வீடுகள், கால்நடை கொட்டகைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து, சாலை விபத்து மற்றும் இயற்கை பேரிடர் ஆகியவற்றால் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். விவசாயிகளுக்கு மற்றும் தோட்ட விவசாயிகளுக்கு ரூ.745 கோடி உள்பட மொத்தம் ரூ.1,108 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த 130 நாட்களில் 12 பேரை காணவில்லை. 857 வீடுகள் மற்றும் 700 கோசாலைகள் சேதமடைந்து உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஜூன் 13ம் தேதி முதல் அரசுக்கு மழை பாதிப்புகள் காரணமாக 1,108 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 857 வீடுகளும், 700 கால்நடை கொட்டகைகளும் சேதமடைந்துள்ளதாகவும் இமாச்சலப் பிரதேச பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Views: - 148

0

0