சிக்கிமில் எல்லை தாண்டிய சீனா..! 20 சீன வீரர்களை துவைத்தெடுத்த இந்திய ராணுவம்..!

25 January 2021, 11:45 am
India_China_Naku_La_Clash_UpdateNews360
Quick Share

கடந்த வாரம் வடக்கு சிக்கிமில் உள்ள நாகு லாவில் எல்லையைத் தாண்டி சீனர்கள் ஊடுருவிய முயற்சியை இந்திய ராணுவம் தோல்வியுறச் செய்தது எனும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் சீன வீரர்கள் எல்லையை கடக்க முயன்றனர். ஆனால் வடக்கு சிக்கிமில் உள்ள நாகு லாவில் இந்திய வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சிக்கிமில் நாகு லாவில் நடந்த மோதலில் சுமார் 20 சீன வீரர்கள் காயமடைந்தனர். மேலும் இந்திய தரப்பில், நான்கு வீரர்கள் காயமடைந்தனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், இந்திய இராணுவ வீரர்கள் வட சிக்கிமில் மோசமான வானிலை இருந்தபோதிலும் சீனாவை வெற்றிகரமாக விரட்டியடித்தனர். எனினும் தற்போது சிக்கிமில் மோதல் நடந்த இடத்தில் நிலைமை அமைதியாக உள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே மோசமான வானிலை இருந்தபோதிலும், இந்தியப் படைகள் கடுமையான விழிப்புணர்வைக் கடைப்பிடித்து வருவதாக இந்திய ராணுவத்தின் மூத்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ரோந்துப் புள்ளி 14’க்கு அருகில் இந்திய வீரர்களுடன் சீன ராணுவ வீரர்கள் மோதியதில், ஜூன் 15 அன்று நடந்த பயங்கர மோதல் சம்பவங்களுக்குப் பின்னர் சமீபத்திய இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0