காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 வீரர்கள் வீர மரணம்..!

17 August 2020, 3:27 pm
Quick Share

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் இந்திய CRPF வீரர்கள் இருவர் வீர மரணம்

காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் CRPF வீரர்கள் இன்று பாதுகாப்பு பணியில் ஈடிபட்டுள்ளனர். அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சிலர் வீரர்கள் மற்றும் அங்கிருந்த காவலர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதை சுதாரித்துக்கொண்ட வீரர்கள், தீவிரவாதிகளை நோக்கி பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கடுமையான சண்டைக்கு இடையே 2 CRPF வீரர்கள், ஒரு போலீஸ் என மூவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தனர்.

தொடர்ந்து வெகுநேரமாக நீடித்த தூப்பாக்கி சூட்டில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக CRPF அதிகாரி ராஜேஷ் குமார் தகவல் அளித்துள்ளார்.

Views: - 28

0

0