கொரோனாவால் நிதித் தட்டுப்பாடு..! எளிதாக பணம் சம்பாதிக்க நினைத்து கம்பி என்னும் இளைஞர்கள்..!

19 October 2020, 12:36 pm
Children_UpdateNews360
Quick Share

11 வயது குழந்தையை கடத்தியதாக இரண்டு நபர்கள் உத்தரபிரதேசத்தின் ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இருவருமே கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் இருந்தனர். மேலும் கடத்தல் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்க விரும்பினர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சோனு மற்றும் அமன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெல்லியில் கல்யாண்புரியில் வசிக்கும் சோனு நாய் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். அமன் ஏ.சி. பழுது பார்க்கும் பணி செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குழந்தை பருவ நண்பர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இருவருமே நிதி ரீதியாக சிரமப்பட்டு விரைவாக பணம் சம்பாதிக்க விரும்பினர். எளிதில் பணம் சம்பாதிக்க விரும்பிய அவர்கள், ஒரு குழந்தையை கடத்த முடிவு செய்தனர்.

சோனுவுக்கு ஒரு 11 வயது குழந்தையின் தாயுடன் பழக்கம் இருந்தது. அந்த குழந்தையை கடத்திச் செல்லும் யோசனையை அவர் முன்வைத்தார். அக்டோபர் 13’ஆம் தேதி மாலை 6 மணியளவில், பால் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தபோது இரண்டு பேரும் குழந்தையை கடத்திச் சென்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவனை காசிப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் 3 நாட்கள் சிறுவனை வைத்திருந்தனர்.

இதற்கிடையில், சிறுவனின் தாய் காவல்துறைக்குச் சென்று, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 365’ன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் அந்த பகுதியின் சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்த போது, சிறுவனின் தாயார் சோனுவை அடையாளம் கண்டுள்ளார்.

அவர் சோனுவின் மொபைல் எண்ணை போலீசாரிடம் கொடுத்தார் மற்றும் ஒரு குழு அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டது. எனினும், குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த 3 நாட்களாக வீட்டில் இல்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர்கள் சோனுவின் நண்பரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்தனர். அதை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து ஹோட்டலை அடைந்தபோது, அமன் ஹோட்டலில் இல்லை. ஆனால் பின்னர் கைது செய்யப்பட்டு குழந்தை மீண்டும் குடும்பத்துடன் இணைக்கப்பட்டது.

Views: - 21

0

0