2ஜி வழக்கு மேல்முறையீடு..! விரைந்து முடிக்க திட்டமிடும் சிபிஐ..! தடை கேட்டு மனு தாக்கல் செய்த கனிமொழி, ராசா..!

22 September 2020, 2:51 pm
Kanomozhi_Raja_UpdateNews360
Quick Share

தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை மேற்கோள் காட்டி, முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி மற்றும் ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாஹித் பல்வா ஆகியோர் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விரைவாக விசாரிக்கக் கோரும் சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகத்தின் வேண்டுகோளை எதிர்த்தனர்.

கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் நடந்த 2 ஜி ஊழல் வழக்கில் அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, கனிமொழி மற்றும் ஷாகித் பல்வா உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த விசாரணையில் கடந்த 2017 டிசம்பரில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் குற்றம் இழைத்ததற்கான போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி, அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது. இது அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து சிபிஐ, இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

எதிர்தரப்பினர் வேண்டுமென்றே செய்த தாமதங்கள், பின்னர் வந்த கொரோனா நோய்த்தொற்று ஆகியவை வழக்கின் விசாரணையை வேகமெடுக்க விடவில்லை. இந்நிலையில் இந்த வலக்கை விசாரித்து வரும் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரிஜேஷ் சேத்தி வரும் நவம்பரில் ஓய்வு பெற உள்ளார்.

அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பூ வழக்கு விசாரணையை முடிக்காவிட்டால், புதிய நீதிபதி தலைமையில் மீண்டும் தாமதமாகலாம் என்பதால், சிபிஐயும் அமலாக்கத்துறையும் முக்கியமான இந்த வழக்கை விரைந்து விசாரித்து விரைவில் தீர்ப்பை பெற்று விட தீவிரமாக முயர்சி செய்து வருகிறது.

எந்தவிதமான ஆதரங்களும் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லாததால் இந்த வழக்கை வீடியோ கான்பெரன்ஸ் முறையின் மூலமே கூட விசாரிக்க முடியும்.

ஆனால் கனிமொழி, ராசா உள்ளிட்ட எதிர்தரப்பினர், வழக்கை வேண்டுமென்றே தாமதப்படுத்த தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் வழக்கு விசாரணையை முன்கூட்டியே தொடங்க தடை கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்.