லட்சத்தீவின் தலைமை நிர்வாகி காலமானார்..! மோடி, அமித் ஷா இரங்கல்..!

5 December 2020, 8:43 am
dineshwar_sharma_updatenews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இன்று லட்சத்தீவின் தலைமை நிர்வாகியும், ஜம்மு காஷ்மீர் அமைதிப் பேச்சுவார்த்தையின் தூதரான தினேஷ்வர் சர்மா மறைந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில், “லட்சத்தீவின் நிர்வாகி ஸ்ரீ தினேஷ்வர் சர்மா ஜி இந்தியாவின் காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு நீண்டகால பங்களிப்புகளை வழங்கினார். அவர் தனது போலீஸ் வாழ்க்கையில் பல முக்கியமான பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சி நடவடிக்கைகளை கையாண்டார். அவரது மறைவால் வருந்துகிறேன். அவரது குடும்பத்திற்கு இரங்கல். ஓம் சாந்தி.” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “லட்சத்தீவின் நிர்வாகி ஸ்ரீ தினேஷ்வர் சர்மா ஜி காலமானதை அறிந்து ஆழ்ந்த வேதனையடைகிறேன். அவர் இந்திய காவல்துறை சேவையின் அர்ப்பணிப்பு மிகுந்த அதிகாரியாக பக்தியுடன் தேசத்திற்கு சேவை செய்தார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.” எனத் தெரிவித்துள்ளார்.

தினேஷ்வர் சர்மா 1976 தொகுதி கேரள கேடரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். அவர் இந்திய உள்நாட்டு உளவுத்துறையான ஐபியில் தலைவராக இருந்தார். இந்திய போலீஸ் சேவையில் ஐபி மிக உயர்ந்த அந்தஸ்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கடைசியாக 2019 நவம்பர் முதல் லட்சத்தீவின் 34’வது நிர்வாகியாக பணியாற்றி வந்தார்.

Views: - 15

0

0