புதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு: தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறை..!!

27 February 2021, 2:20 pm
tasmac pondy - updatenews360
Quick Share

புதுச்சேரி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை 1 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

புதுவை சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறை நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. மேலும் மது விற்பனை நேரமும் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு உள்ளது.

புதுவையில் காலை 9 மணிக்கு மதுபான கடைகள் திறக்கப்படும். இரவு 11 மணி வரை செயல்பட்டு வந்தது. தற்போது இரவு 10 மணி வரை மட்டுமே திறந்து இருக்க வேண்டும் என கலால்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மதுபான கடைகள், ‘கள்’ மற்றும் சாராய கடைகளை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும். இதேபோல் மதுபானங்களை அனுமதி பெற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைதான் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்.

மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு எந்த இடத்திலும் வைத்திருக்க கூடாது என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Views: - 14

0

0