தேர்தலில் வெற்றி பெற்ற கணவனை அலேக்காக தூக்கிய மனைவி; இது வேற லெவல் கொண்டாட்டம்!

21 January 2021, 9:21 am
Quick Share

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில், வெற்றிப்பெற்ற கணவரை, அவரது மனைவி தோளில் தூக்கி சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 15-ம் தேதி கடந்த 15 ஆம் தேதி 34 மாவட்டங்களை உள்ளடக்கிய 14,234 பஞ்சாயத்துகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 880 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதன் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

மேலே இருக்கும் படத்தில் இருப்பவர் ரேணுகா சந்தோஷ் குராவ். தனது கணவனின் வெற்றியை அவர் இவ்வாறு கொண்டாடி தீர்த்துள்ளார். ரேணுகாவின் கணவரான சந்தோஷ் சங்கர் குரா, பலு என்கிற பஞ்சாயத்துக்கு நடந்த தேர்தலில், வெற்றி பெற்றார். மொத்தம் 221 வாக்குகள் பெற்ற இவர், 44 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை வீழ்த்தினார்.

தனது கணவனின் வெற்றி செய்தி கேட்டு, அவரது மனைவியான ரேணுகா, அதிக மகிழ்ச்சியில் திளைத்தார். கணவனின் வெற்றியை கொண்டாட நினைத்த ரேணுகா, அவரை அலேக்காக தூக்கி வீதி உலா வந்தார். இந்த வெற்றி கொண்டாட்டம் வேற லெவலில் இருந்ததால், சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக அவர் இடம்பிடித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, வெற்றி கொண்டாட்டங்களில், ஐந்து பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், ரேணுகா இவ்வாறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ரொம்ப பலசாலி தான் போல..

Views: - 0

0

0