வெளிய ரொம்ப மழையா இருக்கே..! பெட்டில் படுத்து ஹாயாக ஓய்வெடுத்த 5 அடி நீளமுள்ள நாகம்..!
26 August 2020, 6:24 pmஒடிஷாவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், கட்டாக் மாவட்டத்தில் ஹரிராஜ்புரா கிராமத்தில் ஒரு நபர் தனது படுக்கையில் ஒரு பெரிய நாக பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஒடிசாவில் கனமழை பெய்து வரும் நிலையில், சில பாம்புகள் மனிதர்களின் இல்லங்களில் நுழைவது சகஜமான ஒன்றாக மாறி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில் நேற்று ஒடிசாவில் ஒரு நபரின் இல்லத்தில் சுற்றிலும் யாரும் இல்லாதபோது பாம்பு வீட்டிற்குள் நுழைந்து படுக்கையில் ஊர்ந்து சென்றது.
முதலில் சரத் பாண்டா அதை உணரவில்லை. ஆனால் சிறிது நேரத்திலேயே படுக்கை உறையின் கீழே பாம்பு இருப்பதைக் கண்டார். இதையடுத்து அவர் உடனடியாக பாம்பு ஹெல்ப்லைனை அழைத்து பாம்பு குறித்து தகவல் கொடுத்துள்ளார்.
பாம்பு வீட்டிற்கு ஸ்னேக் ஹெல்ப்லைனின் இரண்டு உறுப்பினர்கள் வந்தனர். ஆரம்பத்தில், பாம்பைக் கண்டுபிடிப்பது அவர்களுக்கு கடினமாக இருந்தது, ஆனால் சிறிது நேரம் தேடிய பிறகு அவர்கள் வெற்றி பெற்றனர். இதையடுத்து அவர்கள் பாம்பை மீட்டு அருகிலுள்ள காட்டுக்குள் விடுவித்தனர்.
பாம்பு ஹெல்ப்லைனைச் சேர்ந்தவர்கள் இது விஷ நாகம் என்றும், சுமார் 5 அடி நீளம் உடையது என்றும் கூறினர்.
தொடர்ச்சியான மழை காரணமாக பாம்புகள் வீட்டிற்குள் நுழைவது சகஜம் என்றும், மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.