கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி விநியோகம் குறித்து மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் மோடி ஆலோசனை..!

24 November 2020, 11:44 am
modi_cm_meeting_updatenews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள், கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து தற்போது விவாதித்து வருகின்றனர்.

கூட்டத்தில் கலந்து கொள்ளும் தலைவர்களில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பலர் உள்ளனர்.

இன்றைய சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி கொரோனா நிலைமையை மறுஆய்வு செய்து, முதலமைச்சர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகளுடன் தடுப்பூசிகளை விநியோகிக்கும் உத்தி குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

கொரோனா வைரஸ் நிலைமை குறித்து பிரதமர் கடந்த 8-9 மாதங்களில் மாநில முதல்வர்களுடன் பல மெய்நிகர் கூட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும்போது விரைவாகவும் திறம்படவும் விநியோகிப்பதற்காக, முன்கூட்டியே கட்டமைப்பு மற்றும் விநியோக நடைமுறையை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

தற்போது ஐந்து தடுப்பூசிகள் வளர்ச்சியின் மேம்பட்ட கட்டங்களில் உள்ளது. இவற்றில் நான்கு தடுப்பூசிகள் கட்டம் II / III மற்றும் ஒரு கட்டம் I / II சோதனைகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0

1 thought on “கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி விநியோகம் குறித்து மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் மோடி ஆலோசனை..!

Comments are closed.