நுகாய் ஜுஹார் : விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

23 August 2020, 11:24 am
Modi_UpdateNews360
Quick Share

‘நுகாய் ஜுஹார்’ விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று விவசாயிகளுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, அவர்களின் செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் வாழ்த்தினார். 

“நுகாயின் சிறப்பு, நமது விவசாயிகளின் கடின உழைப்பைக் கொண்டாடுவது பற்றியது. அவர்களின் முயற்சியால் தான் நமது தேசத்திற்கு உணவளிக்கப்படுகிறது. இந்த நல்ல நாள் அனைவருக்கும் செழிப்பையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும். நுகாய் ஜுஹார்!” என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

நுகாய் ஜுஹார் என்றால் என்ன?

பருவத்தின் புதிய பயிரை வரவேற்கும் வகையில் ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் அண்டை மாநிலங்களின் பகுதிகளில் கொண்டாடப்படும், மிகவும் பழமையான விவசாய திருவிழா ஆகும். இது நுகாய் பராப் அல்லது நுகாஹாஹி பெட்காட் என்றும் அழைக்கப்படுகிறது.

நுகாய் என்றால் என்ன?

நுகாய் என்பது இரண்டு சொற்களின் கலவையாகும், இது புதிய அரிசி சாப்பிடுவதை குறிக்கிறது. ‘நுகா’ என்றால் புதியது மற்றும் ‘கை’ என்றால் சாப்பிடுவதாகும்.

இந்த நாளில், மக்கள் உணவு தானியங்களை வணங்குகிறார்கள் மற்றும் சிறப்பு உணவை தயார் செய்கிறார்கள். விவசாயிகள் தங்கள் நிலங்களிலிருந்து முதல் விளைபொருட்களை ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற மாதா சமலேஸ்வரி தேவிக்கு வழங்குகிறார்கள்.

மேலும், உள்ளூர்வாசிகள் பல கலாச்சார நிகழ்ச்சிகளையும், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்கள் அந்தந்த மாவட்டங்களில் மாநிலத்தின் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காண்பிக்க ஏற்பாடு செய்கின்றனர். இருப்பினும், இந்த ஆண்டு, கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டுக்குள்ளேயே பண்டிகையை கொண்டாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 26

0

0