மழைக்காலக் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

18 July 2021, 10:39 pm
Quick Share

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரானது ஜூலை 19 ஆம் தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் முழுக்க முழுக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியே நடத்தப்படும். உரிய சரீர விலகலைக் கடைபிடித்தே அவையில் உறுப்பினர்கள் அமர வைக்கப்படுவர் என்றும் மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா தெரிவித்துள்ளார். நாளை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக, இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகள் பிரச்சினை, கொரோனா தடுப்பூசி, மூன்றாவது அலை, கொரோனா பெருந்தொற்றை கையாளுதல் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், சில மசோதாக்களை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரையொட்டி, நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டே. கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் ஆக்கப்பூர்வமாக விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 80

0

0