மகளின் திருமணத்துக்கு அழைப்பு விடுத்த தொழிலாளி… பிரதமர் மோடி கொடுத்த ‘ஷாக்’..!

15 February 2020, 5:13 pm
Modi 01 updatenews360
Quick Share

தனது மகளின் திருமணத்திற்கு அழைப்பு அனுப்பிய ரிக்சா தொழிலாளிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம்  தூம்ரி கிராமத்தை பிரதமர் மோடி தத்தெடுத்துள்ளார். இந்த கிராமத்தை சேர்ந்த கைரிக்சா தொழிலாளியான மங்கல் கேவத், தனது மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்.

அத்துடன், தனது தொகுதி எம்.பி.யான பிரதமர் மோடிக்கும் அழைக்க விரும்பிய அவர், டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலத்திற்கு மகளின் திருமண அழைப்பிதழை அனுப்பி வைத்தார்.

கடந்த 12ஆம் தேதி மகளின் திருமணம் நடைபெற்ற நாளில் பிரதமர் மோடியிடம் இருந்து அவருக்கு கடிதம் வந்ததை பார்த்து மங்கல் கேவத் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

கடிதத்தில் திருமணம் செய்து புது வாழ்க்கை தொடங்கும் தம்பதியை ஆசி வழங்கி வாழ்த்துவதாக மோடி குறிப்பிட்டிருந்தார்.  பிரதமர் மோடி கடிதம் அனுப்பிய கடிதத்தால் ஏழை தொழிலாளியான மங்கலின் குடும்பம், அந்த பகுதியில் இப்போது பிரபலமாகிவிட்டது.

Leave a Reply