இமாச்சல் பிரதேசத்திற்கு செல்கிறார் பிரதமர் மோடி : முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க திட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2021, 6:01 pm
PM Modi Himachal -Updatenews360
Quick Share

இமாச்சல பிரதேச மாநிலம் மண்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்.

நாளை இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார்.

மேலும்,11,000 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

இதனைத் தொடர்ந்து,இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக,சுமார் 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ரேணுகாஜி அணை திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 366

0

0