கொரோனா தொற்று பரவல் நிலவரம்: 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!!

16 July 2021, 8:43 am
Modi_EU_UpdateNews360
Quick Share

சென்னை: கொரோனா தொற்று பரவல் நிலவரம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் பேசுகிறார்.

கொரோனா தொற்று பரவல் நிலவரம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் பேசுகிறார். கொரோனா பரவலின் 2வது அலை, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது.

stalin cm - updatenews360

மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல், கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு என பல்வேறு சூழ்நிலைகளில் தமிழகம் சிக்கியது. மற்ற மாநிலங்களில் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என பல்வேறு பாதிப்புகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

ஆனாலும் அதிலிருந்து தமிழகம் மீண்டதோடு, தற்போது படிப்படியாக தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 3வது அலை வந்தாலும் அதை சந்திக்க தயார் என்ற நிலைக்கு தமிழகம் வந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் 3வது அலையின் தொடக்கத்தில் உலகம் இருப்பதாகவும் எச்சரித்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலில் கவலையளிப்பதாக காணப்பட்ட 8 வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் 13ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மலைவாழிடங்கள், சந்தைகளில் முக கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் பலர் இருப்பது கவலை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Modi_UpdateNews360

இந்நிலையில் தொற்று பரவலில் சரிவை சந்திக்காத மாநிலங்கள் மற்றும் தொற்று பரவல் அதிகரிக்கும் மாவட்டங்களைக் கொண்ட மாநில முதலமைச்சர்களுடன் அவர் உரையாற்ற உள்ளார்.

அந்த வகையில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் இன்று காலை 11 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

Views: - 165

0

0