ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை… கொரோனாவுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சி குறித்து பேச திட்டம்..!

Author: Babu Lakshmanan
30 October 2021, 9:46 am
pm modi in italy - updatenews360
Quick Share

இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உரையாற்ற உள்ளார்.

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் 16வது ஜி20 அமைப்பின் மாநாடு இன்று தொடங்கி இரு நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு, இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பை ஏற்று. பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். ஜி-20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளனர். இதில், கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், இன்று தொடங்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இதன்பின், பருவ நிலை தொடர்பாக நவ.,1 மற்றும் 2ம் தேதிகளில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க கிளாஸ்கோ செல்கிறார். இந்த மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Views: - 309

0

0