குஸ்தியர்களாக மாறிய அர்ச்சகர்கள் : காளஹஸ்தி கோவிலில் பக்தர்கள் முன் செய்த கேவலமான விஷயம்!!

7 April 2021, 7:26 pm
Kalahsthi Temple Priest -Updatenews360
Quick Share

ஆந்திரா : ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் மூலவர் சன்னதி முன்பு ஆரத்தி தட்டில் யார் பணம் பெறுவது என்ற மோதலில் தலைமை அர்ச்சகர் மற்றும் துணை தலைமை அர்ச்சகர் இடையே ஏற்பட்ட மோதலால் பக்தர்கள் முகம் சுளித்தனர்.

உலக பிரசித்தி பெற்ற வாயு ஸ்தலமான ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞான பிரசுண்ணாம்பிகை கோவில் அர்ச்சகர்கள் பக்தர்கள் முன்னிலையிலேயே மூலவர் சன்னதியின் முன்பு ஆரத்தி தட்டில் விழும் பணம் யாருக்கு என்று பிரித்துக் கொள்வதில் மோதல் ஏற்பட்ட விவகாரத்தில் இருவரையும் சஸ்பெண்ட் செய்து தேவஸ்தான செயல் அதிகாரி பெத்தராஜு உத்தரவிட்டுள்ளார்.

காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் தலைமை அர்ச்சகராக பணிபுரிந்து வருபவர் சம்பந்தம் குருக்கள். இவருக்கும் துணை அர்ச்சகரான கருணா சுவாமிக்கும் இடையே மூலவர் சன்னதியில் கற்பூர ஆரத்தி வழங்கும் போது பக்தர்கள் ஆரத்தி தட்டில் போடக்கூடிய தட்ச்சனை காசு யாருக்கு பிரித்துக் கொள்வது என்று இருவரும் பக்தர்கள் மத்தியிலேயே சண்டையிட்டுக் கொண்டனர்.

கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து பக்தர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த புகாரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த நிலையில் பக்தர்களிடமிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக தலைமை அர்ச்சகர் சம்பந்தம் மற்றும் துணை தலைமை அர்ச்சகர் கருணா குருக்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து செயல் அதிகாரி பெத்தராஜு உத்தரவிட்டார்.

ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவிலில் ஆரத்தி தட்டில் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஆரத்தி வழங்கப்படுவதாகவும் இல்லாவிட்டால் பக்தர்களை துரத்தி அனுப்பி விடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வரக்கூடிய நிலையில் தற்பொழுது ஆரத்தி தட்டில் விழக்கூடிய பணம் யாருக்கு என்று பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட மோதல் சஸ்பெண்ட் வரை சென்றுள்ளது மற்ற ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 4

0

0