ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதலா..? இந்திய ராணுவம் மறுப்பு..!

20 November 2020, 8:33 am
Army_UpdateNews360
Quick Share

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளை இந்திய ராணுவம் நிராகரித்தது.

கடந்த சில நாட்களில் பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து வருவதாகவும், பல பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டன. மேலும் பாகிஸ்தான் படைகள் எல்லையில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்கி பதற்றத்தை அதிகரிக்க முயன்றன.

ஜம்முவின் நக்ரோட்டா பகுதியில் இன்று வியாழக்கிழமை துப்பாக்கிச் சண்டையில் நான்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு போலீசார் காயமடைந்தனர். ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது, ​​நக்ரோட்டா அருகே ஒரு டோல் பிளாசாவில் பயங்கரவாதிகள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.

இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்கு பயங்கரவாதிகள் பயிற்சி பெறும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடைய ஜமாத் உத் தவா, ஜேஇஎம் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் செயலில் உள்ளன என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இந்த பிராந்தியத்தில் பாகிஸ்தான் ஆதரவுடைய பயங்கரவாத முகாம்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பாகிஸ்தானின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கியதாக செய்திகள் வெளியாகின. இதில் பாகிஸ்தான் ஆதரவுடைய பயங்கரவாத முகாம்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது இந்திய ராணுவம் அதை மறுத்து, அப்படி எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என விளக்கமளித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் இந்திய இராணுவத்தின் நடவடிக்கை பற்றிய தகவல்கள் போலியானவை என்று இந்திய ராணுவ இயக்குநர் ஜெனரலான லெப்டினென்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் கூறியுள்ளார்.

Views: - 0

0

0