ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு கண்டிஷன்: சபரிமலைக்கு செல்ல ஆன்லைன் முன்பதிவு அவசியம்

Author: Aarthi
1 October 2020, 7:08 pm
sabarimala-updatenews360
Quick Share

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற உள்ள மண்டல மகர விளக்கு பூஜை மற்றும் ஐப்பசி மாத பூஜைகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்த சான்றிதழுடன் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10 வயதிற்கு குறைவான பக்தர்கள் மற்றும் 65 வயதிற்கு அதிகமான பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.எனவே, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Views: - 55

0

0