பஞ்சாப்பில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 மாணவர்களுக்கு கொரோனா..!

Author: kavin kumar
11 August 2021, 9:32 pm
Quick Share

பஞ்சாப்பில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில், 5 அரசுப் பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கூறி இருக்கிறார். மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். தமிழகத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.இந்நிலையில், பஞ்சாப்பில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில், லுதியானா, அபோகார், நவன்சாகர், அமிர்தசரஸ் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 அரசுப் பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மற்ற மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் அவரவர் வீடுகளில் தடுமைப்படுத்தப்பட்டு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களிடையே தொற்று பரவுவதை கண்காணிப்பதற்காக மாநில சுகாதாரத்துறை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து தினமும் பத்தாயிரம் பரிசோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

Views: - 232

0

0