இளம்பாடகியை பாலியல் பலாத்காரம் செய்த எம்எல்ஏ : மகனுக்கும் பங்குபோட்டுக் கொடுத்த கொடுமை!!

19 October 2020, 5:18 pm
Singer Raped - Updatenews360
Quick Share

டெல்லி : 25 வயதுடையை பாடகியை எம்எல்ஏ ஒருவரும் அவரது மகனும் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள நிஷாத் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ விஜய் மிஸ்ரா மீது 25வயது பாடகி பாலியல் புகார் அளித்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் வெளிச்சத்திற்கு பல விஷயங்கள் வெளிவந்தது.

2014ஆம் ஆண்டு நடந்த கோரமான சம்பவம் குறித்து பேசிய அந்த பாடகி கூறியதாவது, மிஸ்ரா வீட்டு இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த இசை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்ட போது, மிஸ்ரா என்னை தடுத்து நிறுத்தி ஒரு அறையில் வைத்து சீரழித்தார்.

அந்த பலாத்கார சம்பவத்தை வீடியோவாக எடுத்து இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். தொடர்ந்து அந்த வீடியோவை காட்டி கடந்த 2015ம் ஆண்டு மீண்டும் கற்பழித்து விட்டு, என்னையும் அவரது மகனையும் அவரது உறவினர் வீட்டில் கொண்டு சென்று விட்டனர்.
அங்கே அவரது மகனும், உறவினரும் என்னை சீரழித்து விட்டார்கள் என கூறினார்.

தற்போது மிஸ்ரா நில ஆக்கிரமிப்பு வழக்கில் சிறையில் உள்ளதால், இந்த புகாரை அளிக்க வந்ததாகவும், அவருக்கு பயந்து உண்மையை வெளியே சொல்ல முடியவில்லை என பாடகி தெரிவித்துள்ளார்.

Views: - 73

0

0