கடந்த ஆண்டு வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு சிலை : தெலுங்கானா முதல்வர் திறந்து வைத்தார்!!

16 June 2021, 4:38 pm
Curnel Statue - Updatenews360
Quick Share

தெலுங்கானா : கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை தடுக்க முயன்ற போது உயிரிழந்த கர்னல் சந்தோஷ்பாபுவிற்கு முழு உருவச் சிலை.

தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ்பாபு. இந்திய ராணுவத்தின் பீகார் ரெஜிமெண்ட் 16 வது படைபிரிவில் கர்னல் ஆக அப்போது அவர் கல்வான் பள்ளத்தாக்கில் பணியில் இருந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவத்தினரை தடுத்து நிறுத்தும் போது ஏற்பட்ட சண்டையில் கர்னல் சந்தோஷ் பாபு உள்பட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதையடுத்து கர்னல் சந்தோஷ் பாபுவின் உடலுக்கு முதல்வர் சந்திரசேகரராவ் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். பின்னர் கர்னல் சந்தோஷ் பாபு மனைவிக்கு குரூப் -1 அதிகாரி பதவி ஐதராபாத்தில் வழங்கப்பட்டது.

ஐதராபாத்தில் வீட்டுமனை , ரூ.15 கோடி ஆகியவையும் தெலுங்கானா முதல்வரால் வழங்கப்பட்டன. இந்நிலையில் கர்னல் சந்தோஷ் பாபு வீரமரணமடைந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் அவரது சொந்த ஊரான சூர்யா பேட்டையில் அமைக்கப்பட்ட சந்தோஷ் பாபுவின் முழு உருவ சிலையை தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி. ராமராவ் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வீரமரமணடைந்த ராணுவ அதிகாரிக்கு சிலை திறக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத் தியுள்ளது .

Views: - 229

0

0