சுஷாந்த் சிங் மரணம் : சிபிஐ விசாரணைக்கு அனுமதி..! பீகாரின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு..! உச்சநீதிமன்றத்தில் பதில்..!

5 August 2020, 1:33 pm
sushant_updatenews360
Quick Share

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை செய்ய வேண்டும் என்ற பீகார் அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். முன்னதாக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு நிதீஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.

இது தொடர்பாக சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பீகார் டிஜிபியுடன் பேசினார். அவரும் இதற்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறினார்.

இதற்கிடையில், வழக்கை பாட்னாவிலிருந்து மும்பைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ரியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி பீகார் அரசாங்கத்திற்காக ஆஜரானார்.

“பீகார் சம்பந்தப்பட்டதற்கு எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையும் இல்லாததால் வழக்கை மாற்ற முடியாது. அதிகபட்சமாக, பீகார் காவல்துறையினர் ஜீரோ எஃப்.ஐ.ஆரை பதிவு செய்து மும்பை காவல்துறைக்கு மாற்றலாம். அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லாத ஒரு வழக்கை சிபிஐ’க்கு சட்டப்பூர்வமானது இல்லை” என்று ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

இந்த வழக்கை விசாரிக்க பீகார் காவல்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி ரியா சக்ரவர்த்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தொடரும் என்று அவர் கூறியிருந்தார்.

கடந்த வாரம் ரியாவுக்கு எதிராக கே.கே.சிங் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல பிரிவுகளின் கீழ் தற்கொலைக்கு முயன்றது உட்பட எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர், இந்த வழக்கை விசாரிக்க பீகார் காவல்துறை குழு மும்பையில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.