மருத்துவ தொழிற்சாலையில் பயங்கர தீ.! பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.!!

4 August 2020, 2:11 pm
Pharmaceutical industry Fire - Updatenews360
Quick Share

ஆந்திரா : விசாகப்பட்டினத்தில் உள்ள பார்மசூட்டிக்கல் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கரையாகின.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அச்சுதாபுரத்தில் செயல்படும் விஜயஸ்ரீ பார்மா நிறுவனத்தில் இன்று மதிய தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன் பெரும் வெடி சத்தத்துடன் தீ கொழுந்து விட்டு எரிய துவங்கியது.

இதனால் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் அலறியடித்து தொழிற்சாலையில் இருந்து ஓட்டம் பிடித்தனர். தீவிபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் உட்பட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

தீ விபத்து பற்றிய தகவல் அறிந்த விசாகப்பட்டினம் தீயணைப்பு படையினர் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்று தீயை கட்டுபடுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விசாகப்பட்டினத்தில் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிட தக்கது.

Views: - 7

0

0