“வரதட்சணை வேண்டாம்.. ஆசிர்வாதம் போதும்“ : மணப்பெண் நகைகளை பெண் வீட்டாரிடமே ஒப்படைத்த மணமகன்!!

17 July 2021, 3:42 pm
No Dowry - Updatenews360
Quick Share

கேரளா : கேரளாவில் வரதட்சணை கொடுமை அதிகரித்து வந்த நிலையில் மணமகள் அணிந்திருந்த நகைகளை திருமணம் முடிந்ததும் மணமகன், மணப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே வரதட்சணை தான் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வரதட்சணை கொடுத்து பெண்களை கட்டி கொடுப்பதில்லாமல், சில சமயங்களில் இந்த வரதட்சணையே அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு காரணமாக அமைகிறது.

இதில் கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையான பெண்கள் பலியாகும் சம்பவம் அதிகரித்தது. இந்த நிலையில் இந்தியாவே திரும்பி பார்க்க வைக்கும் அளவில் கேரளாவில் சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த நாதஸ்வர இசைக்கலைஞர் சதீஷ் தனது திருமண நிச்சயத்தின் போது வரதட்சணை வேண்டாம் என பெண் வீட்டாரிடம் கூறியிருந்தார்.

ஆனால், மணமகள் ஸ்ருதி தனது பெற்றோர் கொடுத்த 50 சவரன் தங்க நகைகளை அணிந்தபடி மணமேடையில் ஏறினார். இதனையடுத்து, தனது கொள்கையே வரதட்சணை வாங்கக்கூடாது என்பது தான் என்று கூறிய சதீஷ், திருமணம் முடிந்ததும், ஸ்ருதி அணிந்திருந்த நகைகளை மணமகளின் பெற்றோரிடம் ஒப்படைத்தார். சதீஷின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Views: - 132

0

0