#ஹிந்தி_தெரியாது_போடா ஹெஷ்டாக் இந்தியளவில் முதலிடம்: #Tamil ஹெஷ்டாக் 2-ம் இடம்..!

6 September 2020, 11:22 am
Quick Share

இந்திய அளவில் ஹிந்திதெரியாதுபோடா ஹெஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

கடந்த 1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் உலகையே உற்றுநோக்க வைத்தது. இந்நிலையில், சமீபத்தில் கனிமொழி எம்.பி இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இயக்குநர் வெற்றி மாறன்கூட இதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதேபோல இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆயுஷ் அமைச்சகம் நடத்திய மருத்துவர்கள் கருத்தரங்கில் இந்தி தெரியாதவர்கள் வெளியே செல்லலாம் என்று ஆயூஷ் அமைச்சக செயலாளர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

இதற்கிடையே, பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், I am a தமிழ் பேசும் indian என்ற வாசகம் அமைந்துள்ள டிசர்ட் அணிந்த படியும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அவருடன் அருகில் இருக்கும் நடிகர் மெட்ரோ ஹீரோ ஷிரிஷ், இந்தி தெரியாது poda என்ற டிசர்ட்டை அணிந்திருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா ட்வீட் தற்போது இணையதளத்தில் பெரும் வைரலாகியுள்ளது. இதனைபோன்று, இந்திக்கு திணிப்புக்கு எதிராக பல சினிமா பிரபலங்களும், I am a தமிழ் பேசும் indian, இந்தி தெரியாது poda என்ற வாசகம் அமைந்துள்ள டிசர்ட் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், #ஹிந்திதெரியாதுபோடா என்ற ஹெஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி இந்தியளவில் முதலிடத்தில் உள்ளது. இதனைபோன்று #Tamil என்ற ஹெஷ்டாக் டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்தியளவில் #Tamil என்ற ஹெஷ்டாக் 2-வது இடத்தில் உள்ளது.

இன்று காலை #ஹிந்தி_தெரியாது_போடா ஹெஷ்டாக் ட்விட்டரில் தமிழகத்தில் முதலிடத்தில் இருந்தது. இந்தியளவில் 4-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைபோன்று, #TamilSpeakingIndian #HindiTheriyathuPoda #StopHindiImposition #Imaதமிழ்Speaking Indian என்ற ஹெஷ்டாக்கும், ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Views: - 0

0

0