கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 41-ஆக உயர்வு

21 July 2021, 10:36 pm
Quick Share

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது என அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலமான கேரளாவில், கொரோனா வைரஸ் ஒரு பக்கம் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஜிகா வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது. இது அம்மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பால் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஜிகா வைரஸ் பரவி வரும் நிலையில் ஊரடங்கில் மூன்று நாட்கள் தளர்வு அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 43

0

0