டெல்லியில் பிரதமர், அமித்ஷாவுடன் ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு

4 November 2020, 11:06 pm
Quick Share

டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழக ஆளுநர் திடீர் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு இன்று புறப்பட்டார். வரும் வெள்ளிவரை டெல்லியில் தங்கியிருந்து குடியரசு தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் வேல் யாத்திரை, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் உள்ளநிலையில் ஆளுநரின் இந்த திடீர் பயணம் அமைந்துள்ளது. இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் கொரோனா மற்றும் சட்டம் ஒழுங்கு விவகாரம் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதைதொடர்ந்து பன்வாரிலால் புரோகித் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பான எந்தவொரு தகவல் இதுவரை வெளியாகவில்லை. சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நேற்று சந்தித்தநிலையில், ஆளுநர் இந்த பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 75

0

0