மகாராஷ்டிரா தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க தடை..? உத்தவ் அரசு அதிரடி முடிவு..!

22 October 2020, 11:37 am
uddhav_thackeray_updatenews360
Quick Share

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வழக்குகளை விசாரிக்க, மகாராஷ்டிரா அரசு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு அளித்த பொது ஒப்புதலை உத்தவ் தாக்கரே அரசாங்கம் நேற்று வாபஸ் பெற்றது. 

எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்வதற்கு சிபிஐ தனது அதிகார எல்லைக்குள் நுழைய மாநிலத்தின் அனுமதி தேவைப்படும் என்பதை இந்த முடிவு குறிக்கிறது.

இதன் மூலம் மகாராஷ்டிராவில் வழக்குகளை விசாரிக்க சிபிஐ இனி மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது எனும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாஜக அல்லாத ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஏற்கனவே சிபிஐ தங்கள் அதிகார வரம்பில் உள்ள வழக்குகளை விசாரிப்பதை அனுமதிக்கும் அதன் பொது ஒப்புதலை ஏற்கனவே வாபஸ் பெற்றுள்ளன.

அதே சமயம் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டு வருவதால், மகாராஷ்டிரா அரசாங்கத்தின் முடிவு இந்த வழக்கை பாதிக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுஷாந்த் சிங் வழக்கை அர்னாப் கோஸ்வாமி தலைமையிலான ரிபப்ளிக் தொலைக்காட்சி மிகத் தீவிரமாக கையாண்டது. இதனால் அந்த சேனலின் மீது மகாராஷ்டிரா ஆளும் கட்சியினர் கடும் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில் சமயம் பார்த்து டிஆர்பி ஊழலை இதற்கு பயன்படுத்திக்கொள்வதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சகம் நேற்று பிறப்பித்த உத்தரவு, உத்தரபிரதேச அரசு தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங் குறித்த வழக்கின் ஒரு அம்சம் குறித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து உடனடியாக சிபிஐக்கு ஒப்படைத்த விவகாரத்தை மனதில் வைத்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிராக மும்பை காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையில் சிபிஐக்கு அடித்தளம் அமைப்பதற்கான உ.பி. அரசாங்கத்தின் முயற்சியாக இந்த நடவடிக்கையை மகாராஷ்டிரா அரசு கருதியது. 

ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிரான வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாக, டி.ஆர்.பி ஊழலில் சிபிஐ வழக்கு பதிவு செய்வதை மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியின் தலைவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

Views: - 25

0

0