யூ.ஜி.சி நெட் தேர்வு தேதியை அறிவித்தது தேசிய தேர்வு முகமை : வரும் மார்ச் 2ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!!

2 February 2021, 4:00 pm
UGC - Updatenews360
Quick Share

யூஜிசி நெட் தேர்வு வரும் மே மாதத்தில் 11 நாட்கள் நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதிக்கான யூஜிசி நெட் தேர்வு நடைபெறும் தேதியை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உறுதி செய்துள்ளார்.

வரும் மே மாதம் 2,3,4,5,6,7,10,11,12,14 மற்றும 17 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது. கணினி மூலமாக இந்த தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இரண்டு தாள்களாக இந்த தேர்வு நடத்தப்படும் என்றும் முதல் தாளுக்கு 100 மதிப்பெண்களும், இரண்டாம் தாளுக்கு 200 மதிப்பெண்களும் கொண்டது.

வழக்கமாக ஜூன் மற்றும் டிசம்பர் என இருகட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும் நிலையில் கொரோன அச்சுறுத்தல் காரணமாக இம்முறை மாறியுள்ளது. வரும் மார்ச் 2ஆம் தேதி வரை இந்த தேர்வை எழுத தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0