சொத்துக்காக இப்படியா..? பெற்ற தாயை உயிரோடு எரித்த மகன் மற்றும் மருமகள்..!

3 November 2020, 8:22 pm
fire_tragedy_updatenews360
Quick Share

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் 58 வயதான ஒரு பெண் தனது மகன் மற்றும் மருமகளால் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஜலாலாபாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு சொத்து தகராறுக்காக நடந்துள்ளது.

உயிரோடு எரிக்கப்பட்ட அந்த தாய் ரத்னா தனது எல்லா குழந்தைகளுக்கும் சொத்துக்களை சமமாக பங்கிட்டுக் கொடுக்க விரும்பியுள்ளார்.

ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஆகாஷ் தனது தாயை வீட்டை விற்க கட்டாயப்படுத்தினார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க தாய் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் உள்ளூர் பெண்ணை மணந்த பின்னர் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் வசித்து வந்தார். பின்னர் அவர் தனது தாயுடன் வசிப்பதற்காக ஊருக்குத் திரும்பினார்.

ஆனால் இப்போதும் ரத்னா வீட்டை விற்க மறுத்ததால், ஆகாஷ் அவருடன் சண்டையிட்டார். பின்னர் இந்த விஷயம் உள்ளூர் பஞ்சாயத்துக்கு எட்டி, அவர்கள் இருவரையும் இணக்கமாக போகும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் தொடர்ந்து தனது விதவை தாய்க்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் மனைவி மற்றும் ஒரு உறவினருடன் சேர்ந்து தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அப்போது ரத்னாவின் இளைய மகன் இன்னொரு இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், ​​குற்றம் சாட்டப்பட்டவர் தீ வைத்து எரித்து விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து உடனடியாக மருத்துவன்மனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தாய் ரத்னா மரண வாக்கு மூலம் அளித்து விட்டு மரணமடைந்தார்.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட ஆகாஷ் மற்றும் மூன்று உறவினர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Views: - 16

0

0

1 thought on “சொத்துக்காக இப்படியா..? பெற்ற தாயை உயிரோடு எரித்த மகன் மற்றும் மருமகள்..!

Comments are closed.