கொரோனாவால் உயிரிழந்த கணவர்..! தற்கொலை செய்த மனைவி..! நிர்கதியாய் தவிக்கும் சிறுவயது மகள்கள்..! உ.பி.யில் சோகம்..!

7 May 2021, 9:41 pm
Poison_UpdateNews360
Quick Share

கொரோனா காரணமாக உயிரிழந்த கணவரின் மரணத்தால் மிகவும் வேதனையடைந்த 36 வயது பெண் உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் விஷம் குடித்து தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஜந்தேரா கிராமத்தில் வசிக்கும் தீபக் வர்மா (39), கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சஹரன்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த புதன்கிழமை மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

அவர் இறந்ததை அறிந்த அவரது மனைவி சுனிதா விஷம் குடித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் காப்பாற்ற முடியவில்லை.

இந்த தம்பதியருக்கு மூன்று சிறுவயது மகள்கள் உள்ளனர். மூன்றாவது குழந்தைக்கு இரண்டு வயதுதான் ஆகிறது. சஹரன்பூர் நகரில் தீபக் ஒரு ஜெராக்ஸ் கடை வைத்திருந்தார். இந்த தம்பதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மகனை இழந்தது.

கணவரின் இறப்பால் துக்கம் தாளாமல் மனைவி, தனது சிறுவயது குழந்தைகளை தவிக்க விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 124

0

0