போலீஸ் புறக்காவல் நிலையத்தில் வைத்து பாலியல் தொழில் நடத்திய கான்ஸ்டபிள்கள்..! ஆடியோ வெளியானதால் பரபரப்பு..!
19 January 2021, 11:43 amஉத்தரபிரதேச மாநிலத்தில், இரண்டு கான்ஸ்டபிள்கள் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்திற்குள் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள், செஹ்ரமவு வடக்கு காவல் நிலையத்தின் கீழ் உள்ள கட்வாகேடா போலீஸ் புறக்காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தனர். சபலம் கொண்டவர்களை சிக்க வைத்து பணம் பறிக்க பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்திக்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
போலீஸ் புறக்காவல் நிலையத்தில் ஒரு கான்ஸ்டபிள் ஒரு பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்ணுடன் பேசி, அதை தனது போனில் ரெக்கார்டு செய்தபோது இந்த விஷயம் பகிரங்கமாகியுள்ளது.
இந்த விஷயம் அம்பலமான பின்னர், போலீஸ் சூப்பிரண்டு ஜெய் பிரகாஷ் யாதவ் கான்ஸ்டபிள்களை சஸ்பெண்ட் செய்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட கான்ஸ்டபிள்கள் விட்டின் மிஸ்ரா மற்றும் பவன் மிஸ்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கான்ஸ்டபிள்கள் அந்தப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், இளைஞர்களை இதில் சிக்க வைத்து பணம் பறிக்க அழுத்தம் கொடுத்ததாகவும் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
ஆடியோ பதிவு பகிரங்கமானதையடுத்து மூத்த போலீஸ் அதிகாரிகள் புறக்காவல் நிலையத்தை அடைந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில், எஸ்பி மேலும் ஏழு பொலிஸ் கான்ஸ்டபிள்களை போலீஸ் புறக்காவல் நிலையத்திலிருந்து அகற்றி, அந்தந்த போலீஸ் நிலையங்களுடன் இணைத்துள்ளார்.
0
0