அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள்: 3 பேர் பரிதாப பலி..மராட்டியத்தில் சோகம்..!!

Author: Aarthi Sivakumar
28 October 2021, 8:43 am
Quick Share

துலே: மராட்டியத்தில் 8 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image
courtesy

மராட்டியத்தின் துலே நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 7 முதல் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Image
courtesy

இந்த கோர விபத்தில் பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். விபத்து பற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Image
courtesy

சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Views: - 224

0

0