மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தில் நாளையுடன் பிரச்சாரம் நிறைவு : வரும் 27ஆம் தேதி வாக்குப்பதிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2021, 10:00 am
WB Campaign -Updatenews360
Quick Share

அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நாளை முதல் பரப்புரை நிறைவு பெறுவதால் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 294 கொண்ட மேற்குவங்கத்தில் வரும் 27முதல் 30தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான பரப்புரை நாளையுடன் நிறைவு பெறுகிறது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்., பாஜக, காங்கிரஸ்-இடது சாரி கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது.

இதற்கிடையில் பரப்புரை மேற்கொண்ட போது காலில் அடிப்பட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். மேற்கு வங்கத்தை ஆள வேண்டும் என முனைப்பில் பாஜகு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.

அசாம் மாநிலத்தலும் வரும் 27ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்குகிறது. அங்கு 28 பேர் களத்தில் உள்ளனர், பாஜகு மற்றும் எதிர்க்கட்சியாக இருக்க கூடிய காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

Views: - 201

0

0