ஊரடங்கால் பிரிந்த மனைவி, குழந்தைகளை பார்க்க நூதன திருட்டு : பேருந்தை திருடிய களவாணி!!

13 May 2021, 12:08 pm
Bus Theft- Updatenews360
Quick Share

கேரளா : ஊரடங்கில் மனைவி மற்றும் குழந்தையை சந்திக்க பல மாவட்டங்களை கடந்த செல்ல வேண்டியிருப்பதால் ஒருவர் தனியார் பேருந்தையே கொள்ளையடித்துள்ளார்.

கேரளாவில் உள்ள பத்தினம்திட்டா அருகே திருவல்லாவை சேர்ந்த பினூப் என்பவர் தனது சொந்த ஊரில் வசிக்கும் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க முடியாமல் கவலையில் இருந்துள்ளார்.

சொந்த ஊர் செல்ல பேருந்து இல்லாததால் 4 மாவட்டங்களை கடந்து செல்ல வேண்டும் என்பதால் கோழிக்கோடு அருகே நின்றிருந்த தனியார் பேருந்தை திருடி தானே இயக்கிக் கொண்டு புறப்பட்டார்.

சில இடங்களில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்த போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர அதிகாரிகள் அனுப்பியதாக கூறி தப்பி வந்தார்.

ஆனால் மலப்புரம், திருச்சூர் வழியே கோட்டயத்தை அடைந்த போது அங்குள்ள காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்ததால் பினூப்பை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது தான் பேருந்தை திருடி வந்த உண்மையை அவர் ஒப்புக்கொண்டடுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் பேருந்தை பறிமுதல் செய்தனர்.

Views: - 126

0

0