“இரண்டு வருடத்திற்குள் கொரோனா முடிவுக்கு வரலாம்..” – உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை..!

22 August 2020, 10:28 am
Quick Share

தீ போல் பரவி வரும் கொரோனா தொற்று 2 ஆண்டுக்குள் முடிவுக்கு வரும் என உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2020-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்துடனேயே நாட்களை கடத்தி வருகின்றன. இதற்கு எப்போது ஒரு முடிவு வரும் என பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய இந்த கொரோனா தொற்றால், பொருளாதாரம், இயல்பு வாழ்கை, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்தும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த சூழலில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் தொழில்நுட்ப வசதி, நகரமயமாக்கல் காரணமாக தொற்று எளிதில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டு பிடிக்கும் பணியை உலக நாடுகள் தீவிர படுத்திய நிலையில் இருதிகட்ட சோதனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய சுகாதார நிறுவனமும் முனைப்பு காட்டி வருகிறது.

இந்தநிலையில், கொரோனா தொற்றின் பரவல் மற்றும் வீரியம் குறித்து தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வரும் உலக சுகாதார நிறுவனம், இன்னும் 2 ஆண்டுக்குள் கொரோனா முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதேபோல், கடந்த 1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் தீ போல் பரவி ஏராளமான உயிர்களை பலிவாங்கிய நிலையில், அது அடுத்த 2 வருடங்களில் முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Views: - 22

0

0