முன்னாள் ராணுவத்தினருக்கு 5% இட ஒதுக்கீடு..! உத்தரபிரதேச அரசு அதிரடி அறிவிப்பு..!

Author: Sekar
11 October 2020, 1:14 pm
Yogi_Adithyanath_Updatenews360
Quick Share

உத்தரப்பிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு, முன்னாள் பாதுகாப்புப்படையினருக்கான குரூப் சி பதவிகளில் 5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று சேவைகளிலிருந்தும் ஓய்வு பெற்ற மற்றும் முன்னாள் சேவை ஊழியர்கள் 5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெறுவார்கள் என்று ஆதித்யநாத் தெரிவித்தார்.

இந்த வேலைக்கு தகுதி பெற ஒருவர் உத்தரபிரதேசத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு மட்டத்திலும் இந்த இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த நடவடிக்கை முன்னாள் அதிகாரிகள் மற்றும் ஜவான்களை ஊக்குவிக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி கிடைக்க வகை செய்யும்” என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உத்தரபிரதேசம் பாதுகாப்பு சேவைகளுக்கு பெரும்பான்மையான மக்களை அனுப்புகிறது. தற்போது, ஏராளமான முன்னாள் பாதுகாப்புப் படையினர் மாநிலத்தில் வசிக்கின்றனர்.

முன்னதாக பணியின் போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியை மாநில அரசு சமீபத்தில் ரூ 25 லட்சத்திலிருந்து ரூ 50 லட்சமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தியாகியின் குடும்பத்தின் ஒரு உறுப்பினருக்கும் அரசாங்கம் வேலைகளை வழங்கி வருகிறது. ஏப்ரல் 1, 2017’க்குப் பிறகு பணியின் போது மரணமடைந்த பாதுகாப்பு சேவைகள் மற்றும் துணை ராணுவப் படைகளின் குடும்ப உறுப்பினருக்கும் அரசாங்க வேலை வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த உத்தரவு மார்ச் 19, 2018 அன்று வெளியிடப்பட்டது.” எனக் கூறிய செய்தித் தொடர்பாளர், முந்தைய அரசாங்கங்களின் கீழ் அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லை என்று கூறினார்.

Views: - 51

0

0